கூட்டு வன்கொடுமைக்கு இலக்கான பெண்... 5-வயது மகனுடன் சேர்த்து ஆற்றில் வீசிய கொடூரம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் பீகாரில் பெண்ணை கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கிய பின்னர் மகனுடன் ஆற்றில் தள்ளிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

பீகாரின் புக்சர் மாவட்டம் ஒஜாகா பரான் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் தனது 5 வயது மகனுடன் பக்கத்து கிராமத்தில் அமைந்துள்ள வங்கிக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்குவந்த மர்மகும்பல் அந்த பெண்ணையும், அவரது 5 வயது குழந்தையும் கடத்தி சென்றனர்.

கடத்தி சென்ற அந்த பெண்ணை அந்த கும்பல் கூட்டு வன்கொடுமைக்கு இரையாக்கியுள்ளனர். அந்த கொடூரத்தை பாதிக்கப்பட்ட பெண் வெளியே சொல்லிவிடக்கூடாது என எண்ணிய அந்த கொடூர கும்பல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண்ணை, அவரது 5 வயது மகனுடன் சேர்த்து கை, கால்களை கட்டியுள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணையும், அவரது 5 வயது மகனையும் அந்த கொடூர கும்பல் அப்பகுதியில் உள்ள ஆற்றில் வீசிச்சென்றனர்.

ஆற்றில் வீசப்பட்ட அந்த பெண் சத்தமிட்டதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கிராம மக்கள் அந்த பெண்ணை ஆற்றில் இருந்து மீட்டனர்.

ஆனால், அந்த பெண்ணின் 5 வயது மகன் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளது. குழந்தையின் உடலை மீட்ட கிராம மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயங்களுடன் இருந்த அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண் அளித்த புகாரையடுத்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வங்கிக்கு சென்ற பெண் மர்மநபர்களால் கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கப்பட்டு குழந்தையுடம் சேர்ந்து ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்