மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in இந்தியா

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய சொத்து அறிவிப்புகளின் படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பிரதமர் நரேந்திர மோடியின் நிகர சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி பிரதமர் மோடியின் நிகர மதிப்பு ரூ. 2.85 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டு ரூ. 2.49 கோடியுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட ரூ .36 லட்சம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

கடந்த ஒரு வருடத்தில் ரூ. 3.3 லட்சம் வங்கி வைப்பு மற்றும் ரூ. 33 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு முதலீடுகளின் வருமானம் காரணமாக அவரது சொத்துக்கள் அதிகரித்துள்ளன.

ஜூன் 2020 நிலவரப்படி, பிரதமர் மோடி கையில் ரூ. 31,450 ரொக்கமாகவும், எஸ்பிஐ காந்திநகர் என்எஸ்சி கிளையில் உள்ள வங்கி கணக்கில் ரூ. 3,38,173 இருந்தது.

அதே வங்கி கிளையில் அவருக்கு எஃப்.டி.ஆர் மற்றும் எம்ஓடி-யில் ரூ. 1,60,28,939 இருப்பு இருக்கிறது.

ரூ. 8,43,124 மதிப்புள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (என்.எஸ்.சி), ரூ. 1,50,957 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டுக் திட்டங்கள் மற்றும் ரூ. 20,000 மதிப்புள்ள வரி சேமிப்பு இன்ஃப்ரா பத்திரங்கள் ஆகியவை பிரதமர் மோடியிடம் உள்ளன.

மோடி எந்தவொரு கடனும் வாங்கவில்லை மற்றும் அவரது பெயரில் தனிப்பட்ட வாகனம் இல்லை. சுமார் 45 கிராம் எடையுள்ள நான்கு தங்க மோதிரங்களை அவர் வைத்திருக்கிறார், இதன் மதிப்பு ரூ. 1.5 லட்சம் ஆகும்.

மேலும், மோடியிடம் நகரும் சொத்துக்கள் ரூ. 1.75 கோடிக்கு மேல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்திநகரில் செக்டர்-1ல் 3,531 சதுர அடி அளவிலான அடுக்குமாடி குடியிருப்யை மூன்று பேருடன் இணைந்து கூட்டாக வாங்கியுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஒவ்வொருத்தருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 25 சதவீத சம பங்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து குஜராத்தின் முதல்வராக பொறுப்பேற்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், அக்டோபர் 25, 2002 அன்று வாங்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், சொத்தின் விலை ரூ. 1.3 லட்சத்திற்கு மேல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பிரதமரின் சொத்து அல்லது அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு இன்றைய நிலவரப்படி ரூ. 1.10 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு ரூ.28.63 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்