குளிர்சாதன சவப்பெட்டியில் உயிருடன் உள்ள அண்ணனை வைத்து சாகும்வரை காத்திருந்த தம்பி! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் குளிர்சாதன சவப்பெட்டியில் ஒருநாள் முழுவதும் உயிருடன் வைக்கப்பட்டு, மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் 78 வயதான பாலசுப்ரமணிய குமார். இவர், தனது சகோதரர் சரவணன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

இவர் உடல்நிலை சரியில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்துள்ளார்.

சற்று நேரத்தில் இறந்து விடுவார் என நினைத்து குமாரின் தம்பி சரவணன் குளிர்சாதன சவப்பெட்டியை வரவழைத்து அதில் அண்ணனை சில நாட்களுக்கு முன்னர் வைத்துள்ளார்.

ஆனால் பல மணி நேரம் ஆகியும் குமார் இறக்கவில்லை, குளிர்சாதனப் பெட்டியை எடுக்க வந்த தொழிலாளர்கள் குமார் உயிரோடிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து பொலிசார் விரைந்து வந்து குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இந்த குளிர்சாதன சவப்பெட்டியில் ஒருநாள் முழுவதும் உயிருடன் வைக்கப்பட்டு, மீட்கப்பட்ட முதியவர் பாலசுப்ரமணிய குமார் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்