கணவனை விட்டு வேறொருவருடன் ஓட்டம் பிடித்தாக கூறப்பட்ட இளம் பெண் வெளியிட்ட வீடியோ! இது தான் உண்மை என கதறல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலனை தவிக்க விட்டு, ஜிம் மாஸ்டருடன் ஓட்டம் பிடித்த பெண் சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

மதுரை மாவட்டம், பெருங்குடியில் வசித்து வருபவர் ராஜேஷ். 26 வயது மதிக்கத்தக்க இவர் மதுரையில் இருக்கும் விமானநிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், மருத்துவமனையை இருவரும் அனுகியுள்ளனர்.

அப்போது கனிமொழியை சோதித்து பார்த்த மருத்துவர்கள், அவரின் வயிற்றில் நீர்க்கட்டி இருப்பதாகவும், இதற்கு சரியான உடற்பயிற்சி மேற்கொண்டால், அது குறைந்து விடும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, கனிமொழி உடற்பயிற்சிக்காக, வில்லாபுரத்தில் இருக்கும் ஜிம் ஒன்றில் சேர்ந்துள்ளார. அப்போது அங்கு கனிமொழிக்கு, யோகேஷ் கண்ணா என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.

அதன் பின் இவர்கள் இருவரும் காதலித்து, கனிமொழி வீட்டில் இருந்த போது, ராஜேஷை தாக்கிவிட்டு, யோகேஷ் கண்ணா கனிமொழியை அழைத்துச் சென்றுவிட்டதாக செய்தி வெளியானது.

இது குறித்து ராஜேஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் சம்பந்தப்பட்ட கனிமொழி மற்றும் யோகேஷ் கண்ணா இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில், கனிமொழி, ராஜேஷ் என்னை அடிச்சு துன்புறுத்துகிறார், எப்படியாவது என்னை காப்பாற்றும்படி யோகேஷ் இடம் நான் கூறினேன்.

அதன் பின் யோகேஷ் கண்ணா தான் என்னை அவரிடம் இருந்து மீட்டு, ஒரு ஹோமில் சேர்த்தார். எனக்கு ராஜேஷ் உடன் வாழ பிடிக்கவில்லை, இதனால் அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுங்கள் என்று பொலிசாரிடம் கூறியுள்ளார்.

பொலிசார் அதன் பின், கனிமொழியை அவர் தங்கியிருக்க ஹோமிற்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கனிமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராஜேஷ் சொல்வது அனைத்தும் பொய். நானும், ஜிம் மாஸ்டர் யோகேஷூம் நெருங்கி பழகி வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதாக ராஜேஷ் தவறான புகாரை கொடுத்துள்ளார்.

என் புகைப்படத்தையும் வெளியிட்டு எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த விட்டார். இப்போது வரை நான் இந்த ஹோமில்தான் தங்கி இருக்கிறேன்.

எனக்கு என்று யாரும் இல்லை. அரசு வேலைக்காக படித்து கொண்டிருக்கிறேன். அதற்கான சான்றிதழ்கள் என்னிடம் இல்லை, ராஜேஷ் இடம் தான் இருக்கிறது, அவர் தர மறுக்கிறார், என் பெற்றோரும் என்னை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள், இனிமேல் நான் என்ன செய்வேன் என்று வேதனையுடன் கதறி அழுகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்