மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் யார்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in இந்தியா

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வரவிருப்பதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

சமீபத்தில் அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கமல்ஹாசன் தலைமையில் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மக்கள் நீதி மய்யத்தின் செய்ற்குழு, நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ’2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும், 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி உள்பட அனைத்து முடிவுகளையும் எடுக்க கமல்ஹாசனுக்குகே அதிகாரம் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்