பெயிண்டரை 6 வருடமாக காதலித்து ரகசியமாக மணந்த கல்லூரி மாணவி: அதன் பின் அவருக்கு நேர்ந்த கதி!

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கல்லூரி மாணவி காதலரை ரகசியமாக திருமணம் செய்த நிலையில், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, காதல் கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடாவை சேர்ந்த திவ்யா தேஜேஸ்வினி, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், திவ்யா தேஜேஸ்வினி பெயிண்டர் வேலை செய்யும் சின்னசாமி என்பவரை ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது இருவரின் வீட்டிற்கு தெரியாது. இது போன்ற சூழ்நிலையில் மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த திவ்யாவின் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் தடுத்து வைத்துள்ளனர்.

ஆனால், சின்னச்சாமி இதை தெரியாமல், ரகசியமாக செய்து கொண்ட திருமண உறவை திவ்யா முறித்து கொண்டதாக கருதி, வீட்டிற்கு சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற சின்னச்சாமி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து திவ்யாவை குத்தியுள்ளார். பின்னர் அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை முயற்சியிலும் சின்னசாமி ஈடுபட்டார்.

இரண்டு பேரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் ஓடிச்சென்று இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இரண்டு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் திவ்யா ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். சின்னசாமி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார்.

ஒருதலைக்காதல் விவகாரத்தில் கத்தியால் சின்னசாமி குத்திக்கொன்றுவிட்டதாக பெண் வீட்டார் தெரிவித்தனர்.

ஆனால், ஏற்கெனவே இருவரும் திருமணம் செய்துவிட்டதாகவும், பெண் வீட்டில் சம்மதிக்காததால் ஏற்பட்ட தகராறில் சின்னசாமி கொலை செய்யும் அளவுக்கு வந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்