பெற்ற பிள்ளையை வளர்க்க முடியல: பொலிசில் சரணடையும் முன் தந்தை செய்த கொடுஞ்செயல்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் ராஜபாளையம் பகுதியில் மனவளர்ச்சி குன்றிய 6 வயது பெண் குழந்தையை வளர்க்க முடியவில்லை எனக் கூறி தந்தை கொலை செய்து விட்டு பொலிசில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பழனிக்குமார் மற்றும் ராமலட்சுமி தம்பதி.

தினக்கூலிகளான இந்த தம்பதிக்கு 6 வயதில் மாற்றுத்திறனாளியான மகாலட்சுமி என்ற மகள் இருந்தார்.

பிறந்த போதே மகாலட்சுமி மன வளர்ச்சி குன்றி இருந்துள்ளார். இதன் காரணமாக மகாலட்சுமியைப் பார்த்துக் கொள்ள வீட்டில் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்துள்ளது.

கூலித் தொழிலாளிகள் என்பதால் இருவரும் பணிக்குச் சென்றால்தான் வருவாய் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் தாயார் ராமலட்சுமி சனிக் கிழமை வேலைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து தந்தை பழனிக்குமார் மகாலட்சுமியைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருதுள்ளார்

வேலைக்குச் செல்ல முடியாமல் தனது மகள் மகாலட்சுமியைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறதே, என தவறான புரிதலுக்குச் சென்ற தந்தை பழனி, ஒரு கட்டத்தில் தமது மகளை மூச்சை பிடித்து கொன்றுள்ளார்.

அதன்பின் தாமாகவே ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார்.

பெற்ற குழந்தையை வளர்க்கச் சிரமப்பட்டு தந்தையே கொலை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்