உத்தரபிரதேசத்தில் தரையிறங்கிய மர்மமான பறக்கும் பொருள்: செய்வதறியாமல் பயந்து நடுங்கிய மக்கள்

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வானத்தில் பறந்த விசித்தரமான பொருளை ஏலியன் என கருதி அப்பகுதி மக்கள் பதட்டமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் நொய்டாவிலே இச்சம்பவம் நடந்துள்ளது. காலையில் டங்கூர் பகுதியில் விசித்தர பொருள் வானத்தில் காணப்பட்டது. பின்னர் பட்டா பார்சால் கிராமத்திற்கு அருகிலுள்ள கால்வாயில் தரையிறங்கியது.

அங்கு சிலர் ஏலியன் என்று நினைத்து அதை காண கூட்டமாக கூடினர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த விசித்தர பொருள் எரிவாயு பலூன், அது வானத்தில் பறந்து பின்னர் தரையிறங்கி வந்து கால்வாயின் புதர்களில் சிக்கிக்கொண்டது.

பலூனின் ஒரு பகுதி கால்வாயில் பாயும் தண்ணீரைத் தொட்டதால் அது சிறிது அசைந்துள்ளது.

இது தெரியாமல், மக்கள் அங்கு கூடினர் என்று டங்கூர் காவல் ஆய்வாளர் அனில் குமார் பாண்டே கூறினார்.

மக்கள் மத்தியில் பதட்டமடைந்ததற்கு முக்கிய காரணம் பலூனின் அசாதாரண வடிவம்.

hindustantimes

அது அயன்மேன் உருவாத்தில் இருந்தது. எனவே சிலர் இது ஏலியன் அல்லது அதுபோன்ற ஒன்று என்று கூட நினைத்தார்கள், மேலும் பயந்தார்கள், என்று பாண்டே கூறினார்.

பலூனில் தீங்கு விளைவிக்கும் எதுவும் இல்லை, ஆனால் அதை யார் காற்றில் மிதக்கிறார்கள் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என அனில் குமார் பாண்டே கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்