தற்கொலை செய்த கைதியின் வயிற்றில் சிக்கிய கடிதம்: உடற்கூராய்வின் போது மருத்துவர்கள் அதிர்ச்சி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தற்கொலை செய்த சிறைக்கைதியின் வயிற்றுக்குள் கடிதம் இருந்தது தெரியவந்துள்ளது.

கொலை வழக்கில் நாசிக் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அஸ்கர் அலி, சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த பொலிசார் அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அஸ்கர் அலி வயிற்றுக்குள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட கடிதம் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அக்கடிதத்தில், சிறைகாவலர்கள் துன்புறுத்தி வந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது.

மேலும், சிறை அதிகாரிகளின் 5 பேரின் பெயரும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்