பில்லி, சூனியம் எடுப்பதாக அழைத்த சாமியார்! நம்பி சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி: எச்சரிக்கை செய்தி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பில்லி, சூனியம் இருப்பதாக கூறி, வேன் டிரைவரை அழைத்த சாமியார், அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவான சம்பவம் தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன். 45 வயதான இவர் மினிவேன் டிரைவராக இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாமியார் ஒருவரை ராஜகுமாரன் பார்த்துள்ளார்.

அப்போது அவரிடம், தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதற்கு என்ன காரணம் என்றும் கேட்டுள்ளார்.

உடனே அந்த சாமியார் உனக்கு பில்லி சூனியம் சிலர் வைத்துள்ளதாகவும், அதனை எடுக்க சென்னை வருமாறும், வரும்போது 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 கோழிகள் எடுத்து வருமாறும் கூறியுள்ளார்.

அதை நம்பிய, ராஜகுமாரன் தனது மினிவேனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்று, விற்று உறவினருடன் வண்ணாரப்பேட்டை அருகே அந்த சாமியாரிடம் 2 லட்சம் பணம் மற்றும் 2 கோழிகளையும் கொடுத்துள்ளார்.

இதைபெற்ற சாமியார், அதன் பின் தலைமறைவாகியுள்ளார். இதனால் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்ததை நினைத்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று பல போலி சாமியார்கள் திரிவதால், மக்கள் கவனமுடன், எச்சரிக்கையுடனும் இருக்கும் படி பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்