சசிகலா இன்னும் 1 வாரத்தில் விடுதலையாகும் வாய்ப்பு! எப்போ வேண்டுமானாலும் அறிவிப்பு வரும்.. வழக்கறிஞர் முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா
531Shares

சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என அவரின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செந்தூர் பாண்டியன் கூறுகையில், இன்னும் ஒருவாரத்தில் சசிகலா வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளது.

காரணம் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும்.

எனவே சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எ

னவே அவர் ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும் கூறியுள்ளார்.

வழக்கறிஞரின் இந்த பேட்டி சசிகலா சார்ந்திருக்கும் கட்சியின் தொண்டர்கள் மற்றும் அவர் நலம் விரும்பிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்