வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட திருநங்கை! சம்பவம் குறித்து சக திருநங்கைகள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா
742Shares

தமிழகத்தில் பிரியாணி தொழில் செய்து வந்த திருநங்கை வீட்டில் கழுத்தறுப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் திருநங்கைகள் சங்கத் தலைவராக இருந்து வந்த சங்கீதா, பல ஆண்டுகளாக பிரியாணி செய்யும் தொழில் செய்து வந்தார். 65 வயதான இவர், கடந்த மாதம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் டிரான்ஸ் கிட்சேன் பிரியாணி என்ற ஹொட்டலை தொடங்கினர்.

அந்த ஹொட்டலில் 10 திருநங்கைகள் பணியாற்றி வருகின்றனர். அந்த ஹொட்டலுக்கு மக்களிடத்தில் வரவேற்பு அதிகரித்து உள்ள நிலையில், நேற்று சாய்பாபா காலனியில் உள்ள அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலையாளிகளை கண்டுபிடிக்கவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று காவல் ஆணையரிடம் கோவை திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரியாணி தொழிலில் ஏற்பட்ட போட்டியே அவர் கொலைக்கு காரணம் எனவும் திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உக்கடம் பகுதியில் பிரியாணி தொழில் செய்து வந்த அனிஃபா என்ற மற்றொரு திருநங்கையும் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

அந்த வழக்கிலும் கொலையாளி இன்றும் கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கொலை செய்யப்பட்ட திருநங்கை சங்கீதா மற்றோரு இடத்தில் பிரியாணி கடை திறக்க திட்டமிட்டு இருந்தார் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்