தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி இவ்வாறு அறிவித்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றார்கள்.
ஆகவே கொரோனா வைரஸ் நோய் குணமடைவதற்காக தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்கத்தின் செலவிலேயே இலவசமாக தடுப்பூசி போடப்படும் என பழனிசாமி அறிவித்தார்.
அதே சமயம் பீகார் சட்டப்பேரரைவத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
அதில், பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.