நடுவானில் விமானத்தையே கதிகலங்க வைத்த நபர் செய்த செயல்: அதிகாரிகளிடம் குடும்பத்தினர் கூறிய தகவல்

Report Print Basu in இந்தியா
134Shares

இந்தியாவில் விமான பயணத்தின் போது பயணி ஒருவர் தீவிரவாதி இருப்பதாக தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியில் இருந்து கோவாவுக்கு பயணித்த ஏர் இந்தியா விமானத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

நடுவானில் பயணி ஒருவர் விமானத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பதாகக் கூறி சக பயணிகள் மற்றும் விமானக் குழுவினரை கதிகலங்க வைத்துள்ளார்.

விமானத்தில் பயணித்த டெல்லி ஓக்லாவில் வசிக்கும் ஜியா-உல் ஹக் என்ற நபர், தான் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் அதிகாரி என்றும், விமானத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து விமானி உடனடியாக கோவா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குத் தெரிவித்தார், மேலும் விமானம் மதியம் 3:30 மணியளவில் கோவாவில் தரையிறங்கியவுடன், ஜியா-உல் ஹக்கை பொலிசார் கைது செய்தனர்.

தற்போது அவரை கோவா காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் கூட்டுக் குழு விசாரித்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பயணிகளின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், மனச்சோர்வு மற்றும் பதட்டத்தால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், ஜியா-உல் ஹக்-யிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்