கொடூரமாக கொல்லப்பட்ட திருநங்கை உடல் மீது கொட்டப்பட்டிருந்த உப்பு! சம்பவத்தில் அதிரடி திருப்பம்.. இளைஞன் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா
3551Shares

தமிழகத்தில் கழுத்தறுக்கப்பட்டு திருநங்கை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் அதிரடி திருப்பமாக பிரியாணி மாஸ்டர் அவரை கொன்றது தெரியவந்துள்ளது.

கோவையை சேர்ந்த திருநங்கை சங்கீதாவின் அழுகிய சடலம் கடந்த புதன்கிழமை அவரது வீட்டிலுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து கழுத்து அறுபட்ட நிலையில் மீட்கப்பட்டது. உடல் அழுகி துர்நாற்றம் வீசாமல் இருக்க அதன் மீது உப்பும் கொட்டப்பட்டு இருந்தது.

தொழில் போட்டி காரணமாக சங்கீதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல் தகவல் வெளியான நிலையில் சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி சங்கீதாவை கொலை செய்த ராஜேஷ் என்ற 23 வயது இளைஞனை பொலிசார் கைது செய்தனர். திருநங்கை சங்கீதா, சக திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காக பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

அதனடிப்படையில் கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவராக விளங்கிய சங்கீதா, கொரோனா ஊரங்டங்கின்போது பல்வேறு இடங்களில் நிதி திரட்டி, டிரான்ஸ் கிச்சன் என்ற உணவகத்தை தொடங்கினார். இந்த நிலையில் ராஜேஷ், திருநங்கை சங்கீதாவை போனில் அழைத்து தாம் ஐடிஐ படித்துவிட்டு வேலை தேடி வருவதாகவும் உங்களது உணவகத்தில் வேலை வேண்டும் என்றும் கேட்டிருக்கிறான்.

ராஜேஷ் மீது பரிதாபப்பட்டு கடந்த மாதம் பிரியாணி மாஸ்டராக வேலைக்குச் சேர்த்துக்கொண்ட திருநங்கை சங்கீதா, தங்குவதற்கு இடமின்றி தவித்த அவனுக்கு தனது வீட்டிலேயே இடமும் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களாக திருநங்கை சங்கீதாவுக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கியிருக்கிறான். சம்பவத்தன்றும் சங்கீதாவிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தோடு பொலிசில் சொல்லிவிடுவேன் என மிரட்டியதால் கழுத்தறுத்து கொலை செய்திருக்கிறான் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்