சிறையில் கண்ணீர்விட்டு அழுத சசிகலா! நொந்து போன டி.டி.வி: வீடியோ ஆதாரங்களை வெளியிட முடிவு?

Report Print Santhan in இந்தியா
5815Shares

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, வெற்றிவேல் மரணத்தை நினைத்து கண்ணீர் விட்டு அழுததாகவும், சில வீடியோ ஆதாரங்களை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், அ.ம.மு.க-வின் பொருளாளர் வெற்றிவேல் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அ.ம.மு.க-வின் மிகப் பெரிய பலமாக இருந்த வெற்றிவேலின் மரணம் கட்சியினரை கடும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

இது சிறையில் இருக்கும் சசிகலாவையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்த கொரோனா காலத்தில் தன்னுடைய கட்சி ஆக்டிவ்வாக இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்வதற்காக, தினகரன் அவ்வப்போது ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

இந்த கொரோனா காரணமாக வெற்றிவேல், கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கியிருந்தார். ஆனால், அவரையும் விடாமல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்தார் தினகரன்.

இதனால் சசிகலா, தினகரனை தொடர்பு கொண்டு, எதுக்கு இந்த நேரத்தில் ஆலோசனை கூட்டம் எல்லாம் நடத்துறேங்க, அதுவே வெற்றிவேலுக்கு கொரோன வந்ததற்கு காரணமா இருக்கலாம், இப்போது அவர் இறக்கிற அளவுக்கு ஆகிபோச்சு, வெற்றி மாதிரி நமக்கு உழைக்க இன்னொரு ஆளு கிடைக்குமா? அக்கா, ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த வீடியோவை வெளியிட்டு அதனால வந்த எதிர்ப்புகளையெல்லாம் வீரமாக சமாளிச்சிட்டு நின்னு விசுவாசத்த காட்டியவர் வெற்றிவேல் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

மேலும், உன்னை சும்மா தானே இருக்க சொன்னேன், ஏன் இப்படி என்று தினகரனிடம் கொஞ்சம் கோபப்பட, தினகரன் இப்போது நொந்து போய் உள்ளார்.

அதுமட்டுமின்றி, மறைந்த வெற்றிவேல் வசம் கொடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வீடியோ ஆதாரங்களைக் கண்டெடுத்து கைப்பற்றும் படி சசிகலா உத்தரவிட்டிருக்கிறார்.

மொத்தம் 12 வீடியோக்கள் இருக்கிறதாம். அவையெல்லாம் சசிகலா, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது எடுத்த வீடியோக்கள்.

அந்த வீடியோக்களில் ஜெயலலிதா சசிகலாவை புகழ்ந்து சசிகலா செய்து வரும் பணிவிடைகளை பாராட்டி மூச்சுத் திணறலுடன் மரண வாக்கு மூலம்போல பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

நாளை ஒரு வேளை எடப்பாடி கை ஓங்கி, சசிகலாவை அ.தி.மு.க.வில் அனுமதிக்க மறுத்தால் சட்டப்படி ஜனவரி மாதம் வெளியேவரும் சசிகலா, ஜெயலலிதா மரணத்தில் தன் மீதான பழியை உடைக்க அவர் வீடியோக்களை ஒவ்வொன்றாக தேர்தல் முடியும் வரை வெளியிட்டு, அ.தி.மு.கவினரைத் தன் வசப்படுத்துவார் என்று மன்னார்குடி வட்டாரம் கூறுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்