இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் மதுவுக்கு அடிமையான மகன், 65 வயதான தனது தாயை அரிவாளால் வெட்டிக் கொன்றதுடன், தலையை தனியாக துண்டித்து, தலையுடன் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மதுவுக்கு அடிமையான அந்த மகன், மது வாங்க பணம் தராததாலையே இந்த கொடுஞ்செயலை செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த கிராமத்தில் ஒளிந்திருந்த 45 வயதான அந்த கொடூரனை பொலிசார் பிடித்துச் சென்றனர்.
கொலை குறித்து கொலையாளியின் அண்ணன் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.