அது அவருக்கு பிடிக்கவில்லை... மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை: வெளியான பகீர் காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா
5291Shares

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தனது மகளை கொன்றுவிட்டு, தன் தொழில் போட்டியாளர்கள்தான் அவளை கொன்றதாக நாடகம் ஆடிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் காவல்துறையினரை ஏமாற்றுவதற்காக, அவர் ஆரம்பத்தில் தனது மகளை கொலை செய்ததாக முன்று பேர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இதன் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.

இந்த வழக்கில் புகார் அளித்தவர் இறந்த சிறுமியின் தந்தை அஜய் காதிக். இப்புகாரில் அச்சிறுமியை ஈவ்டீசிங் செய்து மூன்று நபர்கள் கொலை செய்ததாக கூறினார்.

இதனையடுத்து காவல்துறை அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் மூன்று பேரையும் கைது செய்தது.

ஆனால், கொல்லப்பட்டதாக கூறும் சிறுமியின் தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அளித்த அறிக்கையில் பல முரண்பாடுகள் இருப்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதன்காரணமாக, இவர்களை ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தது காவல்துறை, இறுதியில் அஜய் சாதிக் காவல்துறையை தவறாக வழிநடத்தியது தெரியவந்தது.

இதன்பின் நடந்த தீவிரமான விசாரணையில் கொல்லப்பட்ட சிறுமியின் சகோதரர், தனது தந்தைதான் சகோதரியை சுட்டுக்கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

தனது சகோதரி ஆண்நண்பர்களுடன் பழகுவது அவருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார். என்ன நடந்தது என்று போலீசாரிடம் சொல்ல வேண்டாம் என்று அவர் எங்கள் குடும்பத்தினரை அச்சுறுத்தினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அஜய் காதிக் குற்றத்தை ஒப்புக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு, நான் என் மகள் மீது கோபமடைந்தேன், ஆத்திரத்தில் அவளைக் கொன்றேன். இந்த பழியை மூன்று நபர்களின்மீது போட்டேன், அவர்களது குடும்பங்களுடன் எனக்கு வணிகப் போட்டி உள்ளது, என்று அதில் பதிவு செய்திருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்