நடிகை குஷ்பு கைது! என்ன காரணம்?

Report Print Basu in இந்தியா

சிதம்பரத்தில் நடைபெற உள்ள பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி சிதம்பரத்தில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் நகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில், சிதம்பரம் ஆர்ப்பாட்த்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு சென்னை முட்டுக்காட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அராஜகத்துக்கு நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். பிரதமர் மோடியின் வழியில் பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற கடைசி மூச்சு வரை போராடுவோம் என கைதான பிறகு குஷ்பு இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்