பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம்: பின்னணி என்ன? பதபதகை்க வைக்கும் காட்சி

Report Print Basu in இந்தியா
1206Shares

இந்தியாவில் பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே மாணவி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தின் பல்லப்கரில் உள்ள அகர்வால் கல்லூரிக்கு வெளியே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

21 வயதான நிகிதா டோமர் என்ற மாணவியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நிகிதா கடந்த மாதம் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தௌபீக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்களன்று நிகிதா கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் போது வழிமறித்த தௌபீக் மற்றும் அவனது கூட்டாளி ஒருவன் காரில் அவரை கடத்த முயன்றுள்ளனர்.

எனினும், அவர்களிடமிருந்து நிகிதா தப்பி முயன்ற போது தௌபீக் துப்பாக்கியால் சுட்டுள்ளான், பின் இருவரும் காரில் தப்பிச்சென்றுள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, நிகிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

தௌபீக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முதன்மை குற்றம் சாட்டப்பட்டவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பல்லப்கர் ஏ.சி.பி ஜெயவீர் ரதி கூறியதாவது, குற்றவாளிகளில் அடையாளம் காணப்பட்டது ஒருவனான சோஹ்னாவைச் சேர்ந்த தௌபீக் நிகிதாவுக்கு ஏற்கனவே தெரிந்தவன்.

தௌபீக் எதிராக சில மாதங்களுக்கு முன்பு நிகிதாவின் உறவினரால் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சமரசம் எட்டப்பட்டது.

நிகிதா தௌபீக்கின் நட்பை நிராகரித்ததால் அவன் இவ்வாறு செய்திருக்காலம் என ஏ.சி.பி ஜெயவீர் ரதி கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்