நடிகை குஷ்பு செய்யப்பட்டதற்கு இது தான் காரணம்! அனைத்து கட்சிகளுக்கும் அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

Report Print Basu in இந்தியா
768Shares

சிதம்பரத்தில் நடைபெறவிருந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அமைச்சர் ஜெயகுமார் விளக்கியுள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி சிதம்பரத்தில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சிதம்பரத்தில் பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு சென்னை முட்டுக்காட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது செய்யப்பட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

மேலும், பாஜக மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்