ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் கைகோர்க்கும் நாடு! இனி முக்கிய ராணுவத் தகவல்களை பரிமாறிக்கொள்ளத் திட்டம்

Report Print Karthi in இந்தியா

சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தனது பலத்தினை அதிகரிக்க இந்தியாவுடன் செயற்கைக் கோள்களின் முக்கிய தரவுகளை பகிர்வது தொடர்பான இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள உரசல்கள் காரணமாக அமெரிக்காவின் இந்த ஒப்பந்தத்திற்கு இந்தியா செவி சாய்த்துள்ளது.

ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குவதற்கு இந்த செயற்கைக்கோள் தரவுகளுக்கான அணுகல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

டெல்லியில் இன்று நடைபெற்ற "2 + 2" உயர் மட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்ப்பதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் தனது இந்திய பிரதிநிதி ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கரையும் சந்தித்தார்.

"கடந்த இரண்டு தசாப்தங்களாக, எங்கள் இருதரப்பு உறவு அதன் பொருள், அம்சங்கள் மற்றும் முக்கியத்துவத்தில் சீராக வளர்ந்துள்ளது" என்றும் இந்த பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளையும் தேசிய பாதுகாப்பு விஷயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட" உதவும் என்றும் ஜெய்சங்கர் செவ்வாயன்று கூறியுள்ளார்.

புவியியல் ஒத்துழைப்பு தொடர்பான அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம், (BECA), அமெரிக்கா நெருங்கிய கூட்டாளிகளுடன் கையெழுத்திடும் சில ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் இராணுவ நடவடிக்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய புவிசார் மற்றும் வானியல் தரவுகளை இந்தியா அணுக அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியப் பிராந்தியத்தில் தொடர்ந்து தனது செல்வாக்கினை நிலை நிறுத்தவும், அதே போல சீனாவுக்கு எதிராக வெளிப்படையாகப் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தவும் அமெரிக்க தொடர்ந்து முயன்று வருகின்றது.

இரண்டாம் உலக போரில் முதன்முதலில் மனித சமூகத்தினை அணு ஆயுதம் கொண்டு அழித்தொழித்த அமெரிக்கா தற்போது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்