கால்செண்டரில் வேலைபார்த்து வந்த மனைவியை உள்ளே புகுந்து சரமாரியாக வெட்டிய கணவன்! விசாரணையில் சொன்ன காரணம்

Report Print Santhan in இந்தியா
821Shares

தமிழகத்தில் கால்செண்டரில் வேலை பார்த்து வந்த மனைவியை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில், குமார் என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து 5 பேரை வைத்து கால் சென்டர் எனும் தொலைபேசி அழைப்பு வணிகம் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில், வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுரேகா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

மஞ்சுரேகா காட்பாடி அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக, கடந்த ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

மஞ்சுரேகா தாய் வீட்டில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தாய் வீட்டில் இருந்தபடியே, வேலைக்குச் சென்று வந்த நிலையில், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு, தினேஷ் பலமுறை அழைத்துள்ளார்.

ஆனால், மஞ்சுரேகா செல்ல மறுத்துள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த, குமார், மாதனூரில் உள்ள கால் சென்டருக்குச் சென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மனைவி மஞ்சுரேகாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் தலை, கை, கால்கள் மற்றும் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, இரத்த வெள்ளத்தில் மஞ்சுரேகா துடித்ததால், பயந்து போன, தினேஷ் உடனடியாக அங்கிருந்து ஓடியுள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள், கால்செண்டரில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மஞ்சுரேகா, அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், மனைவியை வெட்டிய கணவர் தினேஷ், பாகாயம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மனைவி மீதுள்ள சந்தேகத்தில், அவரை கண்மூடித்தனமாக வெட்டியதாக கூறியுள்ளார்.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்