திருநங்கையை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த இளம் பெண்! பொலிசாரிடம் சொன்ன வார்த்தை

Report Print Santhan in இந்தியா
4129Shares

கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் திருநங்கையை காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரியா (22). பட்டதாரியான இவருக்கு, டிக்டாக் செயலி மூலம் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு டிக் டாக்கிற்கு தடை விதிக்கவே, இருவருமே மொபைல் போன் மூலம் தங்களுடைய நட்பை வளர்த்து வந்துள்ளனர்.

இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாற, இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். ஆனால், இந்த கொரோனாவால் இருவரும் உடனடியாக சந்திக்க முடியவில்லை.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், குறித்த திருநங்கை, அப்பெண்ணை பார்ப்பதற்காககேரளா மாநிலம் கோழிக்கோடுவிற்கு சென்றுள்ளார்.

அதன் பின் இருவரும் 15 தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளனர். இருவரும் நுங்கம்பாக்கத்தில் அறை எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இது குறித்த தகவல், பிரியாவின் பெற்றோருக்கு தெரியவர, அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால், பொலிசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், உடனடியாக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அதன்படி மாயமான இளம்பெண்ணை கண்டுபிடித்து தரும்படி பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைதொடர்ந்து கோழிக்கோடு பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அப்பெண், திருநங்கையுடன் நுங்கம்பாக்கத்தில் இருப்பது தெரியந்தது. உடனே தனிப்படை பொலிசார் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி உதவியுடன் பிரியா வீட்டிற்கு சென்றனர்.

பொலிசாரை கண்டதும் பிரியா நான் மேஜர் என் விருப்பத்தின்படி தான் திருநங்கையுடன் வசித்து வருகிறேன். என்னை கேரளா பொலிசாருடன் அனுப்ப கூடாது என்று நுங்கம்பாக்கம் பொலிசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

அதற்கு பொலிசார், இதை நீ நீதிமன்றத்தில் கூறிவிட்டு, உன் விருப்பம் போல் திருநங்கையுடன் சேர்ந்து வாழும் படி அறிவுரை கூற, அதை ஏற்று கொண்ட பிரியா, கேரளா பொலிசாருடன் நேற்று முன்தினம் கோழிக்கோடுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்