வெளிநாட்டில் வசிக்கும் கணவன்! மனைவியின் தவறான செயலை கண்டுபிடித்த நாத்தனாருக்கு நேர்ந்த கதி... அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
1235Shares

இந்தியாவில் தனது நாத்தனாரை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிட்சரை சேர்ந்தவர் ராஜ்விந்தர் கவுர். இவர் கணவர் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜ்விந்தர் வீட்டுக்கு அவர் கணவரின் இளைய சகோதரியும், அவரின் நாத்தனாருமான ஹர்விந்தர் கவுர் (32) நேற்று முன் தினம் வந்தார்.

பின்னர் ஹர்விந்தர் தனது வீட்டுக்கு திரும்பாத நிலையில் சந்தேகத்தின் பேரில் அவரின் கணவர் பல்விந்தர் அங்கு சென்று பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை கொடுத்தது.

காரணம் ஹர்விந்தர் சடலமாகவும் அவர் உடல் எரிக்கப்பட்ட நிலையிலும் இருந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஹர்விந்தர் சடலத்தை பார்த்த போது அவர் வயிற்றில் காயம் இருப்பதை கண்டனர்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக ராஜ்விந்தர் கூறினார்.

ஆனால் சந்தேகமடைந்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்திய போது தனது காதலன் மந்தீப்புடன் சேர்ந்து ஹர்விந்தரை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலம் குறித்து பொலிசார் கூறுகையில், ராஜ்விந்தர் கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில் அவருக்கு மந்தீப்புடன் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவருடன் வீட்டை விட்டு வெளியேற திட்டம் போட்டார். ஆனால் இதனை அறிந்த அவரின் நாத்தனார் ஹர்விந்தர் இதற்கு தடை போட்டார்.

இதனால் ஏற்பட்ட கோபத்தில் காதலனுடன் சேர்ந்து நாத்தனாரை ராஜ்விந்தர் கொலை செய்துள்ளார் என கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து கொலையாளிகள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்