கோடிக்கணக்கான பணத்தை வைத்து நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை! கொள்ளையன் முருகனை நினைவிருக்கா? அவர் இறந்துவிட்டதாக அறிவிப்பு

Report Print Raju Raju in இந்தியா
2530Shares

தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகன் உயிரிழந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதியை தமிழகம் மறக்கமுடியாது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் அவரது கூட்டாளி சுரேஷின் தாய் கனகவல்லி ஆகியோரை பொலிசார் முதலில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4.8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளையின் மூளையாக செயல்பட்டது முருகன் என்பது தெரியவந்தது. ஆனால், அவர் காவல்துறை கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார். காவல்துறை நெருங்கி வருவதை அறிந்ததும் பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில், திருடிய நகைகளை வைத்து பல தமிழ், தெலுங்கு நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி அதிரவைத்ததோடு பல்வேறு வகையில் சொகுசாக வாழ்ந்ததாக தெரிவித்தார்.

அவர் பல இடங்களில் கொள்ளையடித்ததன் மூலம் ரூ 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து முருகன் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

முருகனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, விசாரித்த போது அவருக்கு எயிட்ஸ், நீரிழிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தொடர்ந்து சிகிச்சைஅளிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில்முருகனின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து பெங்களூரு பவுரிங் மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிசார் திருவாரூரில் உள்ள முருகனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

நேற்று மாலை பெங்களூரு வந்த அவரது மனைவி மஞ்சுளாவிடம் பிரேதப் பரிசோதனைக்கு பின் முருகனின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்