நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அர்ஜூன் சம்பத் கூறியதாவது: தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எழுச்சி பெற்றுவருகிறது. ஆன்மிக அரசியல் தான் வருகின்ற தேர்தலில் வெற்றிபெறும். திராவிட அரசியல் முடிவுக்கு வரும்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தான் இருக்கிறார். தகுந்த நேரத்தில் கட்சியை அறிவிப்பார். வருகின்ற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றிபெறுவார்.
பாரதிய ஜனதா கட்சியுடன் இணையவேண்டிய அவசியம் ரஜினிகாந்துக்கு இல்லை. அவருக்கு என தனி செல்வாக்கு உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தவுடன் அத்தனை கட்சிக் கூடாரமும் காலியாகிவிடும். வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்தான் வெற்றிபெறுவார் என இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.