சமையல்கார பெண்ணிடம் நெருக்கம்! சபலத்தால் நடந்த 10 கொலைகள்: 24 வயது இளைஞனின் திடுக்கிடும் செயல்

Report Print Santhan in இந்தியா
3303Shares

இந்தியாவில் 24 வயது மதிக்கத்தக்க நபர் தூக்க மாத்திரை பயன்படுத்தி 10 கொலைகளை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மசூத். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதி வாரங்கல் பகுதியில் இருக்கும் ஒரு கோணிப்படை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர், சஞ்சய் குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து, நிஷாவின் அக்காவின் அக்கா மகள் ரபிகா என்பவர் பிழைப்பு தேடி அதே வாரங்கல்லுக்கு வந்துள்ளார்.

ரபிகா ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு 16 வயதில் ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். வாரங்கல் பகுதிக்கு வந்த ரபிகா,கூலி வேலையை செய்ய ஆரம்பித்தார்.

அப்போது சஞ்சய் குமாரிடம் சமையல்காரியாக ரபிகா வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட, ஒரே வீட்டில் இவர்கள் கள்ளத்தனமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

ஆனால், சஞ்சய்க்கு, ரபிகாவின் 16 வயது மகள் மீது ஆசை வர, அவரை தன்னுடைய ஆசை வார்த்தையால் வீழ்த்தில் அவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் ரபிகாவிற்கு தெரியவர, அதிர்ச்சியடைந்து, இது குறித்து சஞ்சயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், ரபிகாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி சொந்த ஊரான மேற்கு வங்கத்துக்கு நாம் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று ரபிகாவை கடந்த மார்ச் மாதம் 7-ஆம் திகதி ரயிலில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ரயிலி டீ வாங்கிக் கொடுப்பது போன்று, அந்த டீயில் மயக்க மாத்திரை கலந்து கொடுக்க, ரபிகா மயங்கிவிழுந்துள்ளார். அதன் பின் உடனடியாக அவரை இரயிலில் இருந்து கீழே தள்ளி கொன்ற பின், அடுத்த இரயிலில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அவர் வீட்டிற்கு திரும்பியதும், நிஷா, சஞ்சயிடம், ரபிகா எங்கே என்று கேட்க, உடனே சஞ்ச்ய் அவரை சொந்தக்காரர் ஒருவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் சந்தேகம் அடைந்த நிஷா, இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப் போகிறேன் என்று கூற, சஞ்சய், உடனே ரபிகாவிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன் என்று நிஷாவிடம் கூறியுள்ளார்.

ரபிகா இறந்த விவகாரம் வெளியில் தெரிந்துவிட்டால் மாட்டிவிடுவோம் என்று எண்னிய சஞ்சய், நிஷாவின் வீட்டில் இருக்கும் 6 பேரையும் கொல்ல முடிவு செய்துள்ளார்.

அதற்கு ஏற்றபடி நிஷாவின் மகன் பிறந்த நாளும் வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21-ஆம் திகதி நடந்த பிறந்த நாள் விழாவில், நிஷா குடும்பத்திற்கு கூல்டிரிங்ஸ்-ல் தூக்க மாத்திரை கலந்து தந்தார்.

அந்த பிறந்த நாள் விழாவிற்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பங்கேற்றிருந்தனர்.

சஞ்சய் தந்த கூல்டிரிங்ஸை அவர்கள் அனைவருமே குடித்து மயங்கி விழுந்துவிடவே, பிறகு நள்ளிரவில், அவர்கள் அனைவரின் சடலத்தையும் ஒவ்வொரு கோணிப்பையிலும் திணித்து கட்டி, எடுத்து கொண்டு போய் பக்கத்தில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் அங்கிருந்த சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்த போது, சஞ்சய் சடலங்களை தூக்கி செல்வது பதிவாகி இருந்தது.

அதற்கு பிறகு விசாரணை நடத்தியதில் அனைத்து உண்மைகளையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளதால், பொலிசார் கொலை வழக்காக பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்