தான் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய கடிதம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களுக்கு மத்தியில், புதன்கிழமை ரஜினி வெளிட்டதாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
கசிந்த கடிதத்தில், கொரோனா தொற்றுநோய் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச திட்டங்களுக்கு பெரிய தடையை ஏற்படுத்தியுள்ளது.
சிறுநீரக மாற்று நோயாளியான ரஜினிகாந்த், கொரோனா தடுப்பூசி வந்த பின்னரும் வெளியில் செல்ல கடுமையாக கட்டுப்படுத்தப்படலாம், மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர் என கசிந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த கடிதம் தன்னுடையது அல்ல என்றும், ஆனால், அதில் இருந்த தனது உடல்நிலை குறித்த தகவல் உண்மையே என நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2020