பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்! கடும் சோகத்தில் மூழ்கிய குடும்பம்

Report Print Santhan in இந்தியா
1589Shares

தமிழகத்தில், பிரசவ நேரத்தில் வலி அதிகமாக இருக்குமோ என்று எண்ணி 5 மாத கர்ப்பிணி பெண் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ். கார்பெண்டர் வேலை செய்து பவரும் இவருக்கு சுஷ்மிதா என்ற மனைவி உள்ளார்.

சுஷ்மிதா தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பமான சமயத்தில் இருந்தே சுஷ்மிதாவுக்கு வயிற்று வலி அடிக்கடி வந்துள்ளது.

இதை பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லவும், இந்த மாதிரி நேரததில் அப்படித்தான் இருக்கும், கொஞ்சம் பொறுத்து கொள்ளும்படியும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பிரசவ வலிக்கு பயந்துபோன சுஷ்மிதா, சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றார். பிறகு அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்து திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார்.

உடல் முழுவதும் தீப்பிடித்து கொண்டு பற்றி எரிந்தது.,வலி தாங்காமல் சுஷ்மிதா அலற, அவரது சத்தம் கேட்டு குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும ஓடிவந்தனர்.

நெருப்பில் வெந்து கொண்டிருந்த மகளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் மருத்துவர்கள் போராடியும் சுஷ்மிதாவை காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்..

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்