அரசியலுக்கு வரலாமா? வேணாமா? நடிகர் ரஜினிக்கு சீமான் வழங்கிய அறிவுரை

Report Print Basu in இந்தியா
507Shares

தமிழகத்தில் அரசியில் களம் மோசமாக இருக்கிறது இது உங்களுக்கு வேண்டாம் என ரஜினிக்கு சீமான் அறிவுரை கூறியுள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளை முன்னிட்டு சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினார்.

நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், தற்போதுள்ள அரசியல் சூழல் மிக மோசமான ஆட்டமாக இருக்கிறது.

ரஜினியை களமிறக்கிவிடுபவர்களே அவரை இழிவாக பேசுவார்கள். அவரால் விமர்சனங்களை தாங்க முடியாது. அவருக்கு தேவை ஓய்வு நிம்மதி.

சாதி, மதம், சாரயம், பணம் மற்றும் திரைகவர்ச்சி என்ற ஐந்தால் தான் அரசியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினியிடம் திரைகவர்ச்சி ஒன்று மட்டும் இருக்கிறது, ஆனால் மற்றெதெல்லாம் பேராபத்தாக இருக்கிறது.

எனவே, அவர் அரசியலுக்கு வர வேண்டாம், ஆலோசனை வழங்கினாலே போதும். அரசியலில் ரஜினி, கமலை விட நான் மூத்தவன்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் மாற்றம் ஏற்படாது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்