பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் வினோத போராட்டம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

Report Print Basu in இந்தியா
673Shares

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் உள்ள முஸ்லிம் அமைப்பு ஒன்று முன்னெடுத்த வினோத போராட்டத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆசிரியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு இந்தியா பிரான்ஸிக்கான தனது ஆதரவை வெளிப்படுத்திய ஒரு நாள் கழித்து மும்பையில் ஜனாதிபதி மேக்ரோன் தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளானார்.

முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிடுவதற்கான உரிமைக்கு ஆதரவு தெரிவித்ததற்காக மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மும்பை மற்றும் போபாலில் சாலையில் அவதூறாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

மும்பை முகமது அலி சாலையில் ஒட்டப்பட்டிருந்த மேக்ரோனின் போஸ்டர்களை மும்பை பொலிசார் அகற்றினர்.

சாலைியில் ஒட்டப்பட்டிருந்த மேக்ரோன் போஸ்டர்க்ள மீது மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

இந்த போராட்டத்தின் பின்னணியில் முஸ்லிம் அமைப்பான ராசா அகாடமி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்