கணவனுக்கு தெரியாமல் வேறொரு நபரை 2-ஆம் திருமணம் செய்த மனைவி! எனக்கு அவன் தான் வேண்டும் என பிடிவாதம்

Report Print Santhan in இந்தியா
7378Shares

தமிழகத்தில் குழந்தைகளை தவிக்க விட்டு தாய் ஒருவர் காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல்(44). இவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆஷா திருச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

ஆஷாவிற்கு அங்கு, இன்டீரியர் டெக்க்டரேட்டராக வேலை செய்து வரும் அபிஷேக் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் ஆஷா திடீரென்று வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட, குமரவேல் அங்கு சென்று ஆஷாவை அடிக்கடி பார்த்து நட்பை வளர்த்து வந்துள்ளார்.

இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில், நெருங்கி பழகும் அளவிற்கு மாற, இருவரும் உடனே திருமணம் செய்து கொண்டுள்ளனர். அபிஷேக் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஆஷாவுடன் நெருங்கி பழகி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால், இவர்களின் திருமணம் விவகாரம் குமரவேலுக்கு தெரியாமலே இருந்து வந்துள்ளது.

இதையடுத்து கடந்த 2-ஆம் திகதி பணிக்கு சென்ற ஆஷாவை காணவில்லை.. இதனால் பதறிப்போன குமரவேல் மனைவியை காணோம் என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்க, ஆஷாவை தேட ஆரமபித்தனர்.

அப்போதுதான் அபிஷேக் ஆஷாவை கல்யாணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதில் மனைவி உயிருடன் இருக்கும்போதே அபிஷேக்கும், கணவனிடம் விவாகரத்து பெறாமலேயே ஆஷாவும் இந்த கல்யாணத்தை செய்து கொண்டுள்ளனர்.

மனைவியை மீட்டுத்தர கோரி குமரவேல் காவல்நிலையத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் அபிஷேக் ஒரு பொலிஸ்காரரின் மகன் என்பதால் இந்த விவகாரத்தில் பொலிசார் சற்று மெத்தனமாக இருப்பதாகவும் குமரவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்னொரு பக்கம் ஆஷாவை சந்தித்து தன்னுடன் வாழ வருமாறு குமரவேல் கூப்பிட்டுள்ளார். ஆனால், ஆஷாவோ, என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார், என்னை விட அவருக்கு வயது அதிகம், அதை சொல்லாமல் என்னை திருமணம் செய்து கொண்டார்.

எனக்கு அபிஷேக் தான் முக்கியம், அவருடன் தான் வாழுவேன். குழந்தைகளை கொண்டு வந்து என்னிடம் தந்துவிட்டு போகட்டும். அல்லது நீதிமன்றத்திற்கு சென்று நான் குழந்தைகளை பெற்று கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்