திருமணமான 2 மாதத்தில் கணவனின் உண்மை முகத்தை அறிந்த புதுப்பெண்! அவர் வீட்டுக்கு சென்ற பெற்றோர் கண்ட அதிர்ச்சி காட்சி

Report Print Raju Raju in இந்தியா
3025Shares

தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூரை சேர்ந்தவர் சுசிதா கிருபாலினி (25). இவர் அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும் சந்தோஷ்குமார் (28) என்பவருக்கும் கடந்த 30.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் ஒரு கார், 45½ பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை சந்தோஷ்குமாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் சந்தோஷ்குமார், அவரது தாய் இந்திரா (50) மற்றும் குடும்பத்தினர் சுசிதா கிருபாலினியிடம், பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவனின் உண்மையான கோர முகத்தை அறிந்த சுசிதா வேதனையடைந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சந்தோஷ்குமாரின் குடும்பத்தினர், ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு சுசிதா கிருபாலினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு சந்தோஷ்குமாரின் வீட்டுக்கு வந்து, அங்கு இறந்து கிடந்த சுசிதா கிருபாலினியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சுசிதா கிருபாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சுசிதா கிருபாலினியின் உறவினர்கள் ஏராளமானோர் கடலூர் அரசு மருத்துவமனையின் பிணவறை முன்பு ஒன்று திரண்டனர்.

மேலும் ஆறுமுகம், இது தொடர்பில் பொலிஸ் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் பொலிசார் சுசிதா கிருபாலினியின் தற்கொலைக்கு காரணமான சந்தோஷ்குமார், இந்திரா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்