ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை பெற்று வரும் ஏழு நபர்களில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பிரபல ஒளிப்பதிவாளர் ட்வீட் செய்துள்ளார்.
தமிழக அரசு, பேரறிவாளனை விடுதலை செய்ய சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அது தொடர்பாக 2 ஆண்டுகள் வரையிலும் முடிவு எடுக்காத காரணத்தால் உச்ச நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளது.
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உட்பட பல அரசியல் தலைவர்களும் இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலைியல், இனியாவது பேரறிவாளன் வெளிச்சத்தைக் காணட்டும். இதற்கு மேலும் நீதியை தாமதிக்கக் கூடாது என பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
Let him see the light
— pcsreeramISC (@pcsreeram) November 5, 2020
Justice can not be delayed further .#perarivalan