நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 3 நாட்காளாக ஆசோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்க இது சரியான நேரம் இல்லை என கூறினார்.
மேலும், மக்கள் நீதி மய்யம் நேர்மையை முன்நிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும், கூட்டணி சேர்ந்தால் மக்கள் நீதி மய்யம் தான் முதல் அணியாக இருக்கும் என குறிப்பிட்டார்.
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், நண்பனாக அவர் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால், அதே சமயம் நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது தான் என் ஆசை, இறுதி முடிவெடுப்பது அவர் கையில் தான் இருக்கிறது என கமல்ஹாசன் கூறினார்.