முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டதட்ட 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு பரோலை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேரறிவாளன் ஒரு மாத பரோலில் வந்துள்ள நிலையில் எதிர்வரும் 9ம் தேதியுடன் பரோல் முடிவடையவுள்ளது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பேரறிவாளனின் உடல்நலக்குறைவை காரணம் காட்டி பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மருத்துவ சகிச்சை காரணமாக பேரறிவாளனுக்கு பரோலை மேலும் இரண்டு வாரங்கள் அதாவது நவம்பர் 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.