கடற்கரையில் அலங்கோலமான நிலையில் இறந்து கிடந்த பெண் வழக்கில் திருப்பம்! சிக்கிய குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா
932Shares

தமிழகத்தில் கடற்கரையில் பெண் சடலமாக கிடந்த வழக்கில் அதிரடி திருப்பமாக கொலையாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள கடற்கரை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார்.

அவரது ஆடைகள் அலங்கோலமாக இருந்தன. பொலிசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் பெயர் சாந்தி (45) என்பதும் பிரேத பரிசோதனை முடிவில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி விசாரணையை பொலிசார் துரிதப்படுத்தினர்.

சம்பவத்தன்று சாந்தியுடன், பூபாலன் (48) என்பவர் இருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் சாந்தியை கொன்றதை ஒப்பு கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில்,

நான் கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தேன். அப்போது எனக்கு சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் கணவன்-மனைவியாகவே வாழ்ந்து வந்தோம். 2 பேருக்குமே மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தியுடன் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நான் கரும்பு வெட்ட வேறு மாநிலத்திற்கு சென்று விட்டேன். இதற்கிடையே சாந்திக்கு ஆறுமுகம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் புதுவை திரும்பினேன். அதன்பின் சாந்தியை சந்தித்து என்னுடன் வாழ வரும்படி கூறினேன். அவரும் ஆறுமுகத்தை விட்டு விட்டு என்னுடன் வந்து விட்டார்.

சம்பவத்தன்று இரவு நல்லவாடு பகுதியில் உள்ள சாராயக் கடையில் சாராயம் வாங்கி 2 பேரும் குடித்தோம். பின்னர் அங்குள்ள கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சாந்தி என்னிடம் ஆறுமுகத்தை பற்றி உயர்வாகப் பேசினார். இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அவரை தாக்கினேன். அவர் மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி விழுந்தார். அவரைப் பார்த்த போது உயிரிழந்தது தெரியவந்தது என கூறியுள்ளார்.

மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்