முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளம் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் 2 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், 2 ஆண்டுகளாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காததற்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இந்நிலையில், 7 பேர் விடுதலை எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வேம், ஆனால் அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல.
கொலை குற்றம் செய்தவர்கள குற்றாவளிகள் என்றுதான் கருத வேண்டும் தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல. - திரு. @KS_Alagiri pic.twitter.com/b8gNotcPku
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) November 7, 2020