என் உயிருக்கு ஆபத்து... ஜெயிலர் தாக்குகிறார்! சிறைக்கு செல்லும் வழியில் வேனிலிருந்து கதறிய அர்னாப்

Report Print Basu in இந்தியா
503Shares

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரிபப்ளிக் டி.வி. ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, சிறைக்கு செல்லும் வழியில் வேனிலிருந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கதறியுள்ளார்.

ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்தவா் கட்டிட உள்வடிவமைப்பாளர் 53 வயதான அன்வய் நாயக்கு கட்டிட உள்வடிவமைப்பு பணிகள் செய்ததற்கான நிலுவை தொகையை அர்னாப் கோஸ்வாமி) வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அன்வய் நாயக் அலிபாக்கில் உள்ள வீட்டில் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார்.

மூடப்பட்ட இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை அலிபாக் பொலிசார் மும்பை லோயர் பரேலில் உள்ள அர்னாப் கோஸ்வாமியின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக பெரோஸ் சேக், நிதேஷ் சர்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதில் 3 பேரையும் வருகிற 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க அலிபாக் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று பொலிஸ் வேனில் தலோஜா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன் போது செல்லும் வழியில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது வழக்கறிஞருடன் பேச அனுமதி மறுக்கப்படுவதாகவும், சிறைக்காவலர் தன்னை தாக்குவதாக வேனிலிருந்த படி அர்னாப் கோஸ்வாமி கதறியுள்ளார்.

மேலும், நீதிமன்றம் தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்