துப்பாக்கியுடன் அபாயகரமான செல்ஃபி... துயரத்தில் முடிந்த இளைஞரின் ஆசை

Report Print Arbin Arbin in இந்தியா
334Shares

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று துப்பாக்கியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது 22 வயது இளைஞர் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மரணமடைந்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் 22 வயதான இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது தவறுதலாக துப்பாக்கியை அழுத்தி மார்பில் சுட்டுக் கொண்டு மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த இளைஞர் தாரம்புரா கிராமத்தில் வசிக்கும் சவுரப் மாவி என அடையாளம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். அவரும் அவரது நண்பரான நகுல் சர்மாவும், இன்னொரு நண்பரின் திருமணத்திற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தின் போது, காரில் அமர்ந்தபடி துப்பாக்கியை எடுத்து செல்ஃபிக்கு போஸ் கொடுக்கத் தொடங்கினார் அந்த இளைஞர், அப்போது தவறுதலாக மார்பில் சுட்டுக் கொண்டார்.

நண்பரான நகுல் சர்மா உடனடியாக அவரை ஷார்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

விளையாட்டாக செய்த சம்பவத்தால் உயிரிழந்த இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்