அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! உடன் இருந்த வருங்கால கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.. நொடிப்பொழுதில் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
1284Shares

இந்தியாவில் வருங்கால கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gurugram-ஐ சேர்ந்தவர் பூஜா சர்மா (26). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனது வருங்கால கணவருடன் ஹொட்டலுக்கு காரில் சென்றார் பூஜா.

பின்னர் காரில் இருவரும் திரும்பி கொண்டிருந்த போது பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் பூஜா காரை வழிமறித்தனர்.

பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடினர்.

இதை பார்த்த பூஜாவின் வருங்கால கணவர் அதிர்ச்சியடைந்த நிலையில் பூஜா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்து சில தினங்கள் கடந்துவிட்ட நிலையில் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் பொலிசார் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கமெராக்கள் பல வேலை செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

ஆனாலும் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்