கடிகாரத்தில் உள்ள கமெரா மூலம் வீடியோ எடுத்தான்! பல பெண்களை ஏமாற்றிய காசி சென்னை மாணவியை வலையில் வீழ்த்தியது எப்படி?

Report Print Raju Raju in இந்தியா
1173Shares

தமிழகத்தில் பல பெண்களை ஏமாற்றிய காசி சென்னை மாணவியை மிரட்டி எப்படி பணம் பறித்தார் என்பது தொடர்பிலான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்த காசியை அவ்வளவு எளிதாக மக்கள் மறக்க முடியாது.

பல பெண்களுடன் நெருங்கி பழகியதோடு ஆபாச புகைப்படம் எடுத்து அதை சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி மிரட்டி பணம் பறித்து வந்த வழக்கில் அவன் கைது செய்யப்பட்டான்.

இந்த வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பொலிசார் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் காசி தன்னை காதலிப்பது போல நடித்து ஏமாற்றியதோடு பணத்தையும் மிரட்டி பறித்ததாக சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் புதிதாக புகார் அளித்தார்.

அதன்பேரில் காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் சென்னை மாணவியுடன் காசிக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை காசி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது சென்னையை சேர்ந்த மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக காசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அதன் மூலமாகவே பேசியும், பழகியும் வந்தனர். பின்னர் அவரை காதலிப்பதாக கூறி நேரில் சந்திக்க காசி சென்னைக்கு சென்றுள்ளார்.

இதே போல அந்த மாணவியையும் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரவழைத்து இருக்கிறார். கன்னியாகுமரி வந்த மாணவியை காசி காரில் பல்வேறு இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது 4 வழிச்சாலையில் காரை நிறுத்திவிட்டு ஆசை வார்த்தைகள் கூறி காரில் வைத்தே உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

அப்போது தனது கைக்கடிகாரம் மற்றும் செல்போன் மூலம் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி மாணவியிடம் பணம் பறிப்பு செயலிலும் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியிடம் இருந்து எவ்வளவு பணத்தை காசி மிரட்டி பறித்தார்? இதில் காசியின் நண்பர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்