பிரசவத்திற்காக காரில் சென்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி: கோர விபத்தில் 7 பேர் பலி

Report Print Kavitha in இந்தியா
4848Shares

கர்நாடக மாநிலத்தில் பிரசவத்திற்காக காரில் புறப்பட்ட கர்ப்பிணியும் அவரது உறவினர்களும் கோர விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுரஹு மாவட்டம் அலண்ட் நகரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான இஃப்ரானா பேஹம் , அவரது உறவினர்களான ரூபியா பேஹம் , ஜெயஹுன்பி, முனீர், முகமது அலி, சௌகித் அலி என மொத்தம் 7 பேர் இச்சம்பவத்திற்கு பலியாகியுள்ளார்.

இஃப்ரானா பேஹமிற்கு இன்று காலை திடீரென பிரசவவலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் கார் மூலம் கலபுரஹாவில் உள்ள மருத்துவமனையை நோக்கி வேகமான சென்று கொண்டிருந்தபோது சவலஹு என்ற கிராமம் அருகே உள்ள சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் பயங்கர வேகத்தில் மோதியதுயுள்ளது.

மோதிய வேகத்தில் காரும், லாரியும் சாலையை விட்டு விலகி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் கர்ப்பிணியான இஃப்ரானா பேஹம் உள்பட 7 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்