சென்னையை நடுங்க வைத்த சம்பவம்... கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சி: மீட்கப்பட்ட சடலங்கள்

Report Print Arbin Arbin in இந்தியா
438Shares

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை யானைக்கவுனி பகுதியில் கொட்டும் மழைக்கு நடுவே, திடீரென்று பொலிசார் குவிக்கப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த பகுதி முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டதுடன், வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

50க்கும் மேற்பட்ட பொலிசார் அடுத்தடுத்து வாகனங்களில் வந்த நிலையில் ஒரு சின்ன சந்து பகுதிக்கு உள்ளே அமைந்துள்ள வீட்டை நோக்கி அவர்கள் ஓட்டமும் நடையுமாக சென்றனர்.

அந்த சந்துக்குள் சென்ற காவல்துறையினர் ஒரு வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்து மூன்று சடலங்களை மீட்டுள்ளனர்.

அந்த வீட்டில் வசித்து வந்த தலில் சந்த், அவர் மனைவி புஷ்பா பாய், அவர்களின் மகன் ஷீத்தல் ஆகியோர் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தனர்.

இதை காவல்துறையினர் மூலம் அறிந்து கொண்ட பிறகு தான், அந்த பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இரவு 7 மணி அளவில், தலில் சந்த், புஷ்பா பாய் தம்பதியின் மகள் பிங்கி என்பவர் இந்த வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போதுதான் தங்கள் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்து கிடந்ததை பார்த்து அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதைனையடுத்து அருகாமையில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறை ஆய்வு செய்து வருகின்றனர்.

அதில் துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டிலிருந்து ஒருவர் வெளியேறி ஓடும் காட்சி பதிவானதை காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பைனான்ஸ் தொழில் செய்து வந்த தலில்சந்த் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்