சென்னையில் அமித் ஷா மீது பதாகை வீச்சு! கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Basu in இந்தியா
317Shares

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது சிலர் பதாகை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒரு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார்.

அவரை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர். சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கும் அவர் கட்சிதலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு சென்ற அமித் ஷா வழியில் இருபுறமும் பாஜக தொண்டர்கள் நிற்பதைப் பார்த்த அவர் காரைவிட்டு இறங்கி சிறிது தூரம் நடந்துச் சென்றார்.

அவருக்கு தொண்டர்கள் உற்சாகத்துடன் கை அசைத்தனர். சில இடங்களில் அதிமுக தொண்டர்களும் கட்சிக்கொடியுடன் நின்று அமித்ஷாவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

இதன்போது சிலர் அமித் ஷாவை நோக்கி பதாகையை வீசினர். எனினும், பதாகை ஏதும் அவர் மீது படவில்லை.

இந்நிலையில், சென்னையில் அமித் ஷா மீது பதாகை வீசியது யாராக இருந்தாலும் ஏற்க முடியாது என்று, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்