விதவைப் பெண் தூக்கு போட்டு தற்கொலை! இறுதியாக காதலனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலன் பேசாத காரணத்தினால் விரக்த்தியடைந்த விதவை பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ளது கே.எல். எஸ் நகர். பகுதியை சேர்ந்தவர் புவனேஷ்வரி. திருமணமான இவருக்கு 13 வயதில் மகன் உள்ளார்.

இவரின் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதன் காரணமாக புவனேஷ்வரி தன் மகனுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

அப்போது பேஸ்புக் மூலம், காஜா மொய்தின் என்ற நபர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். தனிமையில் கணவனை இழந்த வேதனையில் இருந்த இவருக்கு, காஜா மொய்தீனின் பேச்சுகள் ஆறுதலாக இருந்து வந்துள்ளது.

இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியது. இதனால் புவனேஷ்வரி அவரை காதலிக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே காஜா மொய்தீன் இவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். எத்தனை முறை போன் செய்தும் போன் எடுக்கவில்லை.

இதனால் கடும் விரக்தியடைந்த அவர், இறுதியாக என்னுடன் பேசமாட்டியா, இதோடு என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்