7 பேர் விடுதலை எப்போது? ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார்? மு.க.ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்

Report Print Basu in இந்தியா

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 29 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தன்னிடம் கூறி தகவலை மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

தமிழக ஆளுநரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனே விடுவிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.

7 பேர் விடுதலை காலதாமதத்திற்கு ஆளுநர் சட்ட விளக்கங்களை தந்தார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 29 வருடங்களாக சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக உரிய முறையில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்