இந்தியாவில் நெருங்கிய நண்பர் வீட்டுக்கு வந்த இளம்பெண் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் எர்ணாக்குளத்தை சேர்ந்தவர் சூர்யா (26). இளம்பெண்ணான இவர் சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர் அசோக் வீட்டுக்கு வந்தார்.
அங்கு அசோக்கின் அறையில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். அப்போது வீட்டில் அசோக், அவரின் பெற்றோர் மற்றும் இன்னொரு பெண் இருந்தனர்.
அவர்கள் அறையில் இருந்து வெளியில் சென்ற போது சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவலை அசோக்கின் பெற்றோர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சூர்யா அங்கேயே இறந்துவிட்டதால் அவளை மருத்துவமனைக்கு தூக்கி செல்லவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சூர்யா இறந்த தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர், அப்போது படுக்கையில் சூர்யா சடலமாக கிடக்க மின்விசிறியில் அவர் துப்பட்டா தொங்கி கொண்டிருந்ததை கண்டுள்ளனர்.
இது குறித்து அசோக் கூறுகையில், நானும் சூர்யாவும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தோம்,
ஏறக்குறைய 4 ஆண்டுகளாக சூர்யாவுடன் நெருக்கமான நண்பராக இருந்தேன் என கூறியுள்ளார்.
அசோக்குக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.