என்னை ஏன் கட்டாயப்படுத்தினீர்கள்! திருமணமான 1 மாதத்தில் கழிவறைக்கு சென்ற புதுப்பெண் செய்த விபரீத காரியம்

Report Print Raju Raju in இந்தியா
380Shares

இந்தியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சித்தூரை சேர்ந்தவர் சைதன்யா. இளம்பெண்ணான இவருக்கும் தங்கவேல் (29) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் திகதி திருமணம் நடந்தது.

ஆனால் இந்த திருமணத்தில் சைதன்யாவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. இதையடுத்து என்னை ஏன் கட்டாயப்படுத்தி மணந்து கொண்டீர்கள் என கணவரிடம் சைதன்யா சண்டை போட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் கணவர் வீட்டு கழிப்பறையில் சைதன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவலை கேட்ட அவர் குடும்பத்தார் கோபமடைந்து தங்கவேல் வீட்டை அடித்து நொறுக்கினார்கள்.

மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினார்கள்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்